More

வரலாற்றில் இன்று ஜூலி உதித்த தினம்… இதெல்லாம் பார்த்துதானே ஏமாந்தோம்!


நம் அனைவருக்கும் நன்கு அறிமுகம் ஆன ஜூலி ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் அறிமுகமாகி பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் ஆதரவு மற்றும் வெறுப்பையும் சம்பாதித்தார். முதல் மூன்று சீசனும் முடிந்துவிட்டது. ஆனால் இன்னும் ஜூலியை கிண்டல் செய்வதை நிறுத்தவில்லை. இருந்தும் அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் விளம்பரம், ரியாலிட்டி ஷோ, பட வாய்ப்பு என படு பிஸியாக ஆகிவிட்டார்.

Advertising
Advertising

மேலும், அம்மன் தாயி, Dr.S அனிதா MBBS , பொல்லாத உலகில் பயங்கர கேம் உள்ளிட்ட சில படங்களிலும் கமிட்டாகி நடித்து வந்தார். அப்படியிருந்தும் ஜூலி என்ன செய்தாலும் கலாய்ப்பதற்கென்று இன்னுமும் ஒரு கூட்டமும் இருந்துகொண்டு தான் வருகிறது. அதற்கு ஏற்றார் போல ஜூலியும் இடைவிடாமல் அடுத்தடுத்து கன்டென்ட் கொடுத்துக்கொண்டு தான் வருகிறார்.

தன்னை கிண்டல் செய்பவர்களுக்கு பெரிதாக ரியாக்ட் செய்யாவிட்டாலும் சில சமயம் கடுப்பாகி நெத்தியடி பதில் கொடுத்து கிண்டல் செய்பவர்களின் மூக்கை உடைப்பார். இந்நிலையில் இன்று தான் ஜூலி மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டு மக்கள் மத்தியில் வீரப்பெண்மணியாக பிரபலமான நாள். 

அதை நினைவு கூறும் வகையில் அவரது போராட்ட குரல் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு ட்ரோல் செய்து வருகின்றனர் நெட்டிசன்ஸ். இதெல்லாம் பாத்துதான் சில்லறைய சிதறவிட்டாங்க.. அந்த வேஷமெல்லாம் பிக்பாஸில் களைத்து ஜூலியை காலி பண்ண பெருமை ஆண்டவரையே சேரும்.

 

Published by
adminram

Recent Posts