More

குரூப்பா சேர்ந்து என்னை டார்கெட் பண்றாங்க – சுரேஷுக்கு எதிராக பிக்பாஸ் போட்டியாளர்கள்(வீடியோ)

தற்போது துவங்கியுள்ள பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் நடிகர் சுரேஷ் சக்ரவர்த்தி எல்லோருடனும் மோதல் போக்கை கடை பிடித்து வருகின்றனர். அவர் பேசும் விதம் கோபத்தை ஏற்படுத்துவதால் அவருடன் மற்ற போட்டியாளர்கள் சண்டை போட்டு வருகின்றனர். 

Advertising
Advertising

நிகழ்ச்சி துவங்கி 2 நாட்களிலேயே அவருக்கும் அனிதா சம்பத்துக்கும் இடையே முட்டிக்கொண்டது. அதன்பின் சனம் ஷெட்டி, ரியோ ராஜ், வேல் முருகன் என எல்லோருடன் அவர் சண்டை போட்டு வருகிறார். இது தொடர்பான புரமோ வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் எல்லோரும் குழுவாக இணைந்து என்னை கார்னர் செய்கிறார்கள் என சுரேஷ் கூறுகிறார். இது கேட்டு கோபமடைந்த ரியோ ராஜ், சனம் ஷெட்டி ஆகியோர் அவருடன் வாக்குவாதம் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.

 

Published by
adminram

Recent Posts