ஆரம்பிக்கலாமா?!.. துவங்கியது ‘பிக்பாஸ் சீசன் 5’...அசத்தல் புரமோ வீடியோ
தமிழக மக்களிடம் வரவேற்பை பெற்ற டிவி நிகழ்ச்சி பிக்பாஸ். 2017ம் வருடம் ஒளிபரப்பான முதல் சீசன் வெற்றி பெற்றதால் தற்போது வரை 4 சீசன்கள் முடிந்துள்ளது. 4 சீசன்களையுமே கமல்ஹாசனே நடத்தினார். கடந்த வருடம் கொரோனோ பரவல் காரணமாக ஜூன் மாதம் துவங்க வேண்டிய நிகழ்ச்சி அக்டோபர் மாதம் தள்ளிப்போய் ஜனவரி மாதம் முடிந்தது. இதில் நடிகர் ஆதி டைட்டில் வின்னரானார்.
எனவே, பிக்பாஸ் 5வது சீசன் எப்போது துவங்கும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கமல்ஹாசன் தேர்தலில் பிஸியாக இருந்ததால் இந்த மாதம் ஜூன் மாதம் பிக்பாஸ் படப்பிடிப்பு துவங்கும் என செய்திகள் வெளியானது. ஆனால், கொரோனா 2ம் அலை காரணமாக இந்த முறையும் அக்டோபர் மாதத்திற்கு தள்ளி சென்றுள்ளது. இந்த முறை விஜய் டிவி மூலம் பிரபலமடைந்த புகழ், பாலா, ஷிவானி, அஸ்வின் ஆகியோரின் பெயர்கள் அடிபடுகிறது. ஒருபக்கம் போட்டியாளர்களை ஒப்பந்தம் செய்யும் பணிகள் துவங்கியுள்ளது. இந்நிகழ்ச்சிக்கான புரமோ ஷூட்டிங் சமீபத்தில் நடந்தது. இந்த முறையும் கமல்ஹாசனே இந்நிகழ்ச்சியை நடத்தவுள்ளார்.
இந்நிலையில், இந்நிகழ்ச்சியின் புரமோ வீடியோவை விஜய் டிவி தற்போது வெளியிட்டுள்ளது. விக்ரம் பட ஸ்டைலில் ‘ஆரம்பிக்கலாமா’ என கமல் கேட்க, பிக்பாஸ் சீசன் 5 விரைவில் என ஒளிபரப்பப்படுகிறது. இதைப்பார்க்கும் போது விரைவில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆரம்பிக்கலாமா? #BiggBossTamil Season 5 | விரைவில்.. @ikamalhaasan #BBTamilSeason5 #BiggBossTamil5 #KamalHassan #பிக்பாஸ் #VijayTelevision pic.twitter.com/Nozd1mE21X
— Vijay Television (@vijaytelevision) August 31, 2021