
இந்தியா முழுவதும் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ். ஹிந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என 5 மொழிகளில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஒவ்வொரு மொழியிலும் ஒரு சீசன் முடிந்த பின் அடுத்த சீசன் துவங்கும். தமிழில் கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சி 4 சீசன்கள் முடிந்துவிட்டது. 5வது சீசன் விரைவில் துவங்கவுள்ளது.
இந்நிலையில், முதன் முதலாக பிக்பாஸ் நிகழ்ச்சி OTT தளத்தில் வெளியாகவுள்ளது. அதாவது, தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவதற்கு முன்பே முதல் 6 வாரங்களுக்கு வூட் (voot) எனப்படும் ஆப்-பில் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது முதன் முதலாக “பிக்பாஸ் OTT” என்ற தலைப்பில், வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வெளியாக உள்ளது.
அதேநேரம் தற்போது ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி மட்டுமே OTT தளத்தில் வெளியாகவுள்ளது. தமிழ் பிக்பாஸ் பற்றி எந்த செய்தியும் இல்லை. விரைவில் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியும் ஒடிடி தளத்தில் வெளியாக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.





