ஹிந்தி படத்தில் சிறப்பு தோற்றத்தில் தளபதி விஜய்.. அதுவும் மாஸ் ஹீரோவுடன்!

by adminram |

f8f34f576c37856550e2bf6079312032

ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அட்லீ. இப்படத்தின் வெற்றிக்குப்பின் தளபதி விஜய்யை வைத்து 'தெறி' படத்தை இயக்கினார். இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். சுனைனா ஒரு சிறிய ரோலில் ல்=நடித்திருந்தார்.

இப்படம் வெற்றியடையவே இந்த கூட்டணி 'மெர்சல்' படத்தின்மூலம் மீண்டும் இணைந்தது. விஜய் மூன்று வேடத்தில் நடித்த இப்படத்தில் சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நடித்திருந்தனர். கடைசியாக விஜய்யை வைத்து பிகில் படத்தை இயக்கியிருந்தார்.

1f572fe7412e06b10f755ea8b4a3a879-1
sharukh khan

பிகில் படத்தையடுத்து அட்லீ தற்போது ஹிந்தி நடிகர் ஷாருக்கானை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இதில் நாயகியாக நயன்தாரா, பிரியாமணி, சானா மல்கோத்ரா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் காமெடியனாக யோகி பாபு நடிக்கிறார்.

இப்படத்திற்கு ஜவான் என பெயரிட்டுள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்தில் புனேவில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

சமீபத்தில் கூட படப்பிடிப்பு தளத்திருந்து ஷாருக்கான், நயன்தாராவின் புகைப்படம் சமூக வலைதளத்தில் லீக் ஆகியிருந்தது. இப்படத்திற்கு முன்னதாகவே பிரியாமணி மற்றும் யோகிபாபு ஷாருக்கான் நடித்திருந்த 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தில் நடித்திருந்தனர்.

edf63d70ad92d1391fd6945a30816a13

இந்நிலையில் தற்போது 'ஜவான்' படத்தில் விஜய் சிறிய வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தென்னிந்தியாவில் இப்படத்தின் வியாபாரத்திற்காக விஜய் இப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளாராம். முன்னதாக விஜய் சிறுத்தை படத்தின் ஹிந்தி வெர்சனான 'ரவுடி ரத்தோர்' படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story