பொதுவாக, இருசக்கர வாகனங்களின் டயர் பஞ்சரானால் வண்டியை உருட்டி சென்று பஞ்சர் கடையை தேடி அலைவது வாகன ஓட்டிகளுக்கு மிகவும் சிரமான ஒன்றாகவே இருக்கிறது.
இதைப்புரிந்து கொண்டு, அவர்களுக்கு உதவும் வகையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் வசிக்கும் மெக்கானிக் விருமாண்டி,அந்த இடத்திற்கே சென்று பஞ்சர் ஒட்டித் தருகிறார். இதற்காக, தன்னுடைய இருசக்கர வாகனத்திலேயே பஞ்சர் ஒட்டுவது மற்றும் காற்றடிக்கும் இயந்திரம் உட்பட அனைத்து உபகரணங்களையும் வைத்துள்ளார்.
அதோடு, டீக்கடைகள், பேருந்து நிறுத்தம் என்று மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தனது தொலைபேசி எண்ணை எழுதி வாகன ஒட்டிகளின் பார்வை படும்படியாக வைத்துள்ளர்.
விருமாண்டியின் சேவை அப்பகுதி மக்களை பெரிதும் கவந்துள்ளது. அவரை சமூக ஆர்வலர்களும் பாராட்டி வருகின்றனர்.
கடந்த 10…
தற்போது தமிழ்…
விஜயின் ஜனநாயகன்…
இறுதிச்சுற்று., சூரரைப்போற்று…
நேற்று பிக்…