Connect with us

சினிமாவிலும் நடிப்பு!.. நிஜத்திலும் ஆக்டிங்!.. தனுஷ் பண்றது ரொம்ப தப்பு!.. விட்டு விளாசிய பிரபலம்!..

latest news

சினிமாவிலும் நடிப்பு!.. நிஜத்திலும் ஆக்டிங்!.. தனுஷ் பண்றது ரொம்ப தப்பு!.. விட்டு விளாசிய பிரபலம்!..

நடிகர் தனுஷ் போலியாகவே பேசுகிறார் என்றும் அவரது செயலில் நடிப்புத் தான் தெரிகிறதே தவிர யதார்த்தமும் உண்மையும் கொஞ்சம் கூட தெரியவில்லை என பிஸ்மி பேசியுள்ளார்.

நடிகர் தனுஷ் சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் சமீப காலமாக ரொம்பவே நடித்துக் கொண்டிருக்கிறார் என பத்திரிக்கையாளர் பிஸ்மி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

ராயன் படத்தை இயக்கிய நடித்துள்ள தனுஷ் அந்த படத்தின் இசை வெளியிட்டு விழாவில் தனது அண்ணன் செல்வராகவனை அண்ணன் என்று அழைக்க மாட்டாரா? அது என்ன சார்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். செல்வராகவன் தம்பி என உரிமையுடன் பேசுவதில் ஒரு யதார்த்தம் தெரிகிறது. ஆனால் தனுஷிடம் அது மிஸ்ஸிங் என பிஸ்மி கூறியுள்ளார்.

மேலும், ராயன் திரைப்படம் வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை மற்றும் அசுரன் போன்ற படங்கள் போல இருக்காது என்றும் இந்த படத்தின் கதையில் ஒரு கனெக்ட்டிவிட்டியோ உண்மைத்தன்மையோ இல்லாமல், ராமாயணத்தையும், மகாபாரதத்தையும் உருவகப்படுத்தி எடுத்திருப்பதால் நிச்சயம் படம் வெளியான பின்னர், பலருக்கும் ஏமாற்றத்தை அளிக்கும் என்று கூறியுள்ளார்.

ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில், குடும்ப ரசிகர்கள் இந்த படத்திற்கு செல்ல வாய்ப்பே இல்லை. திருச்சிற்றம்பலம் படத்தில் வசூலை அள்ளியது போல சன் பிக்சர்ஸ் ராயன் படத்தில் வசூலை அள்ளுமா என்பது சந்தேகம் தான் என்கிறார்.

ரஜினிகாந்த் மேனரிஸம், ரஜினிகாந்தை காப்பியடித்து குட்டிக் கதை சொல்வது போல போயஸ் கார்டனில் வீடு கட்டிய கதையெல்லாம் தனுஷ் சொல்வதை கேட்டாலே காமெடியாகத்தான் இருக்கிறது. அதில், எதுவுமே உண்மை இல்லை, அத்தனையும் பொய் எனக் கூறியுள்ளார்.

ராயன் படம் பெரிய வெற்றி பெறுவதற்கு எல்லாம் வாய்ப்பே இல்லை என சினிமா வட்டாரத்தில் கடைசி நேரத்தில் பலமான பேச்சுக்கள் அடிபடுகின்றன. இன்னும் 2 நாட்களில் படத்தின் ரிசல்ட் தெரிந்து விடும் என்றார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top