பாஜக தமிழகத்தில் வேரூன்ற பல்வேறு வகைகளில் முயற்சி செய்து வரும் நிலையில் அவற்றில் ஒன்றாக தமிழகத்தில் உள்ள திரையுலகைச் சேர்ந்தவர்களை இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது என கூறப்படுகிறது. சமீபகாலமாக பாஜகவின் பல திரையுலக நட்சத்திரங்கள் இணைந்தனர் என்பது தெரிந்ததே. அவற்றில் ராதாரவியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் திரையுலகினர் மட்டுமின்றி விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளை இழுக்கும் முயற்சியில் பாஜக உள்ளதாக கூறப்படுகிறது. சாய்னா நேவால் சமீபத்தில் பாஜகவில் இணைந்தது இதற்கு சான்றாகும்
இந்த நிலையில் அஜித், விஜய், விஜயகாந்த் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கிய இயக்குனர் பேரரசு, திடீரென இன்று பாஜகவின் தன்னை இணைத்துக்கொண்டார். முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களை நேரில் சந்தித்த இயக்குனர் பேரரசு, அவரிடமிருந்து உறுப்பினர் அட்டையை பெற்றுக் கொண்டு கட்சியில் இணைந்தார்
வரும் 2021 ஆம் ஆண்டு தேர்தலில் பேரரசு தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. திரையுலகைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேரை பாஜகவில் சேர்த்தாலும், அக்கட்சி தமிழகத்தில் வேரூன்ற முடியாது என இது குறித்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
தமிழ் சினிமாவில்…
சமீபகாலமாகவே தமிழில்…
ரஜினியின் 173-வது…
சமீபத்தில் சிவகார்த்திகேயன்…
துள்ளுவதோ இளமை…