பாஜகவில் இணைவு...குஷ்பு நீக்கம்... காங்கிரஸ் அதிரடி நடவடிக்கை
நடிகை குஷ்பு 2014ம் வருடம் தன்னை காங்கிரஸில் இணைத்துக்கொண்டார். அதைத்தொடர்ந்து அவருக்கு தேசிய செய்தி தொடர்பாளர் பதவி கொடுக்கப்பட்டது. அவரும் காங்கிரஸில் தீவிரமாக பணியாற்றி வந்தார். ஆனால், அங்கு சில அதிருப்திகள் இருந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், குஷ்பு பாஜகவில் இணையவுள்ளதாக கடந்த சில நாட்களாகவே செய்திகள் வெளிவண்டு கொண்டிருந்தது. ஆனால், குஷ்பு அதை மறுத்துவந்தார்.
ஆனால், நேற்று டெல்லி சென்ற அவர் பாஜக தலைவர்களிடம் பேசினார். எனவே, அவர் பாஜகவில் இணைவது உறுதியானது. இன்று மதியம் 12.30 மணியளவில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் குஷ்பு தன்னை பாஜகவில் இணைத்துக்கொள்வது உறுதியாகியுள்ளது.
இந்த செய்தி வெளியான நிலையில், காங்கிரஸ் கட்சி குஷ்புவை நீக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கிடையே, காங்கிரஸிலிருந்து விலகுவதாக சோனியா காந்திக்கு அவர் எழுதிய கடிதமும் வெளியாகியுள்ளது.