வருமான வரி ரெய்டை அடுத்து பாஜக ரெய்டு: மாஸ்டர் படப்பிடிப்பு

விஜய் நடித்து வரும் ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது திடீரென வருமான வரித்துறையினர் விஜய்யை அழைத்து சென்று விசாரணை செய்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம் 

இந்த நிலையில் வருமானவரித் துறையினர் விசாரணை முடிவடைந்து இன்று மீண்டும் நெய்வேலியில் உள்ள என்எல்சி சுரங்கத்தில் நடைபெற்று வரும் ’மாஸ்டர்’ படப்பிடிப்பில் விஜய் கலந்து கொண்டார். இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.

இந்த நிலையில் திடீரென பாஜகவினர் ’மாஸ்டர்’ படப்பிடிப்பு நடைபெறும் என்.எல்.சி சுரங்கம் அருகே போராட்டம் நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. என்எல்சி சுரங்கத்தில் இதுவரை எந்த படப்பிடிப்புக்கும் அனுமதி கொடுத்தது இல்லை என்றும் தற்போது ’மாஸ்டர்’ படப்பிடிப்புக்கு அனுமதி கொடுத்தது தவறு என்றும் பாஜகவினர் படப்பிடிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Published by
adminram