பிளாக்ல டிக்கெட் வித்தும் லாபம் இல்லை – புலம்பும் தர்பார் விநியோகஸ்தர்கள் !

28b02b040b331b181c0a839bd74e89ec

இரு தினங்களுக்கு முன்பு வெளியான தர்பார் திரைப்படத்தின் வசூல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என விநியோகஸ்தர்கள் கையை பிசைய ஆரம்பித்துள்ளனர்.

ரஜினிகாந்த், நயன்தாரா, யோகி பாபு மற்றும் நிவேதா தாமஸ் ஆகியோரின் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் உருவான தர்பார் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி தமிழகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியானது. தமிழகம் முழுவதும் படத்திற்கு சிறப்பு காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு கோலாகலமான வரவேற்பு அளிக்கப்பட்டது. வழக்கமாக ரஜினி படங்களின் முதல் நாள் காட்சிக்கு விற்கப்படும் விலையை விட அதிகமான விலையில் விற்கப்பட்டன.

ஆனாலும் சிறப்புக் காட்சி முடிந்தவுடனே படத்தை பற்றிய எதிர்மறை விமர்சனங்கள் வெளியானதை அடுத்து படத்தின் வசூல் குறைய ஆரம்பித்தது. முதல் நாளின் மாலை மற்றும் இரவு காட்சிகளில் பெரும்பாலான தியேட்டர்களில் டிக்கெட்டுகள் கிடைக்க ஆரம்பித்தன. சிறப்பு காட்சிகளில் கொள்ளை காசுக்கு டிக்கெட் விற்கப்பட்டாலும் வழக்கமாக ரஜினி படத்திற்கு வரும் முதல் நாள் வசூல் வரவில்லை என படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் தர்பார் திரைப்படம் முதல் நாள் வசூலாக கிட்டத்தட்ட 16 கோடி வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது இது வழக்கமாக ரஜினி படங்கள் வசூலை விட 30% குறைவு என்று சொல்லப்படுகிறது.

 

Related Articles

Next Story