இப்ப நான் புரட்சி தமிழன் இல்லீங்னா!. பேன் இண்டியா ஸ்டாருங்னா!. சத்தியாஜை பங்கம் செய்த பிரபலம்...
சத்தியராஜ் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்தபோது ரஜினி சூப்பர்ஸ்டாராகவும், வசூல் மன்னனாகவும் இருந்தார். சத்தியராஜுக்கு அடியாள் வேடம் கிடைத்தது. சில படங்களில் வில்லனின் அடியாட்களில் ஒருவராக வருவார். ரஜினி ஹீரோவாக நடித்த சில படங்களில் கூட வில்லனின் அடியாட்களில் ஒருவாராக வந்து ரஜினியிடம் அடி வாங்கி கொண்டு போய்விடுவார்.
இப்படி பல படங்களில் நடித்திருக்கிறார் சத்தியராஜ். பல படங்களில் அவர் பேசிய ஒரே வசனம் ‘யெஸ் பாஸ்’ தான். அதன்பின் மணிவண்னனுடன் கூட்டணி போட்டு நக்கலாக பேசி நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். குறிப்பாக மணிவண்னன் எழுதி வசனங்களால்தான் சத்தியராஜ் அதிகம் பிரபலமானார்.
வில்லனாக நடிக்க துவங்கியர் ஹீரோவாக மாறி பல படங்களிலும் நடித்தார். இப்போது வயதாகிவிட்டதால் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். ரஜினியோடு சில படங்களில் இணைந்து நடித்திருந்தாலும் ரஜினியை கடுமையாக விமர்சித்து வந்தவர்தான் சத்தியராஜ். ரஜினியின் வெற்றி மீது சத்தியாரஜுக்கு எப்போதும் ஒரு காண்டு உண்டு.
காவிரி பிரச்சனை வந்தபோது ரஜினியை மேடையில் வைத்துக்கொண்டே அவரை கடுமையாக விமர்சித்தார் சத்தியராஜ். சிவாஜி படம் உருவானபோது அதில் வில்லனாக நடிக்க அவரை ஷங்கர் கேட்டபோது ‘நான் ஹீரோவாக நடிக்கும் படத்தில் ரஜினி வில்லனாக நடிப்பாரா?’ என நக்கலுடன் கேட்டவர்தான் சத்தியராஜ். ஆனால், சமீபகாலமாக சத்தியராஜிடம் பெரிய மாற்றம் தெரிகிறது. யார் அடுத்த சூப்பர்ஸ்டார் என்கிற பஞ்சாயத்து ஓடியபோது ‘சூப்பர்ஸ்டார்னா அது ரஜினி சார் மட்டும்தான். விஜய்க்குதான் தளபதி என்கிற பட்டம் இருக்கே’ என சொன்னார் சத்தியராஜ். அதோடு, இப்போது ரஜினி அடுத்து நடிக்கவுள்ள கூலி படத்தில் சத்தியராஜ் நடிக்கவிருக்கிறார்.
மேலும், ‘சிவாஜி படத்தில் ஏன் நடிக்கவில்லை?’ என்கிற கேள்விக்கு ‘எங்க இரண்டு பேருக்கும் சமமான கதாபாத்திரம் இல்லாததால் நான் நடிக்கவில்லை’ என உருட்டினார். இந்நிலையில், நடிகர்களின் செயல்பாடுகளை நக்கலடிக்கும் யுடியூப் விமர்சகர் புளூசட்ட மாறன் டிவிட்டர் பக்கத்தில் இந்த செய்தியை பகிர்ந்து ‘அது மட்டுமா?. காவிரி பிரச்சனையில் ரஜினியை கண்டபடி திட்டி இருக்கேன். அதெல்லாம் பழைய சத்தியராஜ். இப்பலாம் புரட்சி செய்றது இல்லீங்கனா..
தமிழ்நாட்டை ஆதரிக்க பக்கத்து மாநிலத்தையும், வடநாட்டையும் வம்பிழுத்தா நான் நடிக்கிற பேன் இண்டியா படத்தோடா யாவாரம் பாதிக்கும். சம்பளம் வேற பல்க்கா கொடுக்குறாங்க.. அதனால் இனிமேல் நான் புரட்சித்தமிழன் இல்லீங்ணா.. பான் இண்டியா ஆர்ட்டிஸ்ட்ங்கன்னா.. ரஜினி சார் மாதிரி நாட்டுல எது நடந்தாலும் கமுக்கு பம்மிகிட்டு இருக்க வேண்டியதுதான்’ என சத்தியராஜ் சொல்வது போல பதிவிட்டு நக்கலடித்திருக்கிறார்.