Categories: latest news

மகேஷ் பாபுவை நடிக்க வைக்க படாதபாடு படும் ராஜமெளலி!.. விஜய் ஆண்டனியை கோர்த்து விட்ட புளூ சட்டை மாறன்!

ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்க உள்ள பிரம்மாண்ட படம் விரைவில் தொடங்க உள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களை பேன் இந்தியா ஹீரோக்களாக ராஜமௌலி மாற்றி வருகிறார்.

தமிழ் சினிமாவில் ஷங்கர் செய்ய தவறவிட்ட பல்வேறு விஷயங்களை டோலிவுட்டில் ராஜமௌலி துணிச்சலுடன் செய்து காட்டி சாதனைப் படைத்து வருகிறார். ராம்சரண், பிரபாஸ், ஜூனியர் என்டிஆர் என பல நடிகர்களை உருவாக்கிய ராஜமௌலி அடுத்ததாக மகேஷ் பாபுவை பேன் வேர்ல்டு நடிகராக மாற்ற முயற்சிகளை செய்து வருகிறார்.

500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள மகேஷ்பாபுவின் படம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக, மகேஷ் பாபுவுக்கு நடிகர் நாசரை வைத்து நடிப்புப் பயிற்சியையும் வசன உச்சரிப்பு பயிற்சியியையும் கொடுக்க ராஜமௌலி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அந்த செய்தியை அறிந்த புளூ சட்டை மாறன் தற்போது தனது எக்ஸ் தள பக்கத்தில், ஒரு வழியாக.. மகேஷ்பாபுவை நடிக்க வைக்கும் இமாலய முயற்சி ஆரம்பம். விஜய் ஆண்டனிக்கும் நடிப்பு பயிற்சி தந்து தமிழ் ரசிகர்களை காப்பாற்றுவாரா நாசர் சார்? எனக் கேட்டு கலாய்த்துள்ளார்.

விஜய் ஆண்டனி நடித்த ரோமியோ படத்திற்கு கடுமையான விமர்சனங்களை கொடுத்த புளூ சட்டை மாறனுக்கு எதிராக விஜய் ஆண்டனி பதிவு ஒன்றை போட்ட நிலையில், இருவருக்கும் இடையே மோதல் முற்றிக் கொண்டது.

தொடர்ந்து விஜய் ஆண்டனிக்கு நடிக்கத் தெரியவில்லை என புளூ சட்டை மாறன் தனது வன்மத்தை கக்கி வருகிறார். அதேபோல மகேஷ் பாபுவுக்கும் நடிக்கத் தெரியவில்லை எனக் கூறி தெலுங்கு ரசிகர்களின் கோபத்திற்கும் ஆளாகி உள்ளார்.

Saranya M

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

5 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

6 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

7 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

8 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

8 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

15 hours ago