More

சம்பளமாக 80 கோடி கேட்ட பாடிபில்டர் நடிகர்… அதிர்ச்சியில் திரையுலகம்!

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஹ்ருத்திக் ரோஷன் வெப் சீரிஸில் நடிக்க 80 கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளாராம்.

Advertising
Advertising

பாலிவுட் இயக்குனர் ராகேஷ் ரோஷனின் மகனான ஹ்ருத்திக் ரோஷன் கோய் மில் கயா படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அந்த படம் மிகப்பெரிய வெற்றி அடையவே பாலிவுட்டின் சாக்லேட் பாயாக வலம் வந்தார். அதுமட்டுமில்லாமல் நடனத்திலும் உடல்கட்டைப் பேணுவதிலும் அவர் முன்னிலையில் இருந்தார். ஆனால் கான் நடிகர்கள் போல அவரால் சூப்பர் ஸ்டாராக ஆக முடியவில்லை. ஒரு வெற்றி கிடைத்தால் இரண்டு தோல்விகள் என்றே அவர் சினிமா வாழ்க்கை அமைந்தது.

இந்நிலையில் இப்போது அவரை வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒரு தயாரிப்பாளர் அணுகியுள்ளார். அதில் நடிக்க 80 கோடி ரூபாய் கேட்டு தயாரிப்பாளர் மட்டுமில்லாமல் பாலிவுட்டையே மிரள வைத்துள்ளார் ரோஷன். சக நடிகரான அக்‌ஷய் குமாருக்கு வெப் சீரிஸில் நடிக்க 80 கோடி கொடுக்கப்பட்டதால் தனக்கும் கொடுக்க வேண்டும் எனக் கேட்டாராம். ஆனால் அவர் மார்க்கெட்டுக்கு அவ்வளவெல்லாம் கொடுக்க முடியாது என தயாரிப்பு தரப்பு விலகிவிட்டதாம்.

Published by
adminram

Recent Posts