
கொல்கத்தாவில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடப்பதால் ஐபிஎல் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடக்க இருக்கும் ஐபிஎல் போட்டித் தொடருக்கான ஏலம் வரும் 19 ஆம் தேதி கொல்கத்தாவில் நடக்க இருக்கிறது. இந்நிலையில் அம்மாநிலம் முழுவதும் மக்கள் குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதற்கு அம்மாநில அரசும் ஆதரவுத் தெரிவித்துள்ளதால் பதட்டம் அதிகமாகியுள்ளது.
இதனால் இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் ஐபிஎல் ஏலம் கொல்கத்தாவில் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை பதற்றம் நீடிக்குமாயின் வேறு இடத்துக்கோ அல்லது வேறு தேதிக்கோ மாற்றப்படும் என சொல்லப்படுகிறது.



