More

அவர் ஜென்டில்மேன்… பொண்ணு மேல தான் தப்பு… களமிறங்கிய பாலிவுட் நடிகை

உணவு டெலிவரி செய்ய வந்த ஸொமேட்டோ ஊழியர் தன்னை தாக்கியதாக மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டான ஹிதேஷா சந்திரனி ரத்தம் சொட்ட சமூக வலைத்தளங்களில் ஒரு பதிவை வெளியிட்டார். இது பரபரப்பாக துவங்கியது. முதலில் பலரும் அந்த ஊழியரை மோசமாக விமர்சித்தனர். ஆனால், அவர் தனது நியாயத்தை ஒரு வீடியோவாக வெளியிட்டு இருந்தார். அதில் தான் அவரை தாக்கவில்லை என்றும், அவர் தான் தன்னிடம் மோசமாக நடந்து கொண்டார். அவரின் கை மோதிரத்தில் தான் அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் அழுதுக்கொண்டே தெரிவித்து இருந்தார்.

Advertising
Advertising

இதனால், இந்த விவகாரத்தில் பெரும் திருப்பம் ஏற்பட்டது. அந்த ஊழியருக்கு பலரும் ஆதரவு தெரிவித்தனர். இரு தரப்பை விசாரிக்க கோரிக்கை வைக்கப்பட்டது. மென்டூ என்ற ஹேஸ்டேக்கும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில், முதல் ஆளாக நடிகை ப்ரணிதி சோப்ரா அந்த ஊழியருக்கு தனது ஆதரவை தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டு இருக்கும் ட்வீட்டில், ஸொமேட்டோ இந்தியா இந்த விவகாரத்தை தீவிரமாக ஆராய்ந்து உண்மையை வெளிகொண்டு வாருங்கள். அந்த ஜென்டில்மேன் நல்லவர் என்றால் ( நான் அவரிடம் தப்பு இல்லை என நம்புகிறேன்) அந்த பெண்ணை விசாரிக்க உதவ வேண்டும்.   இது மனிததன்மையற்ற, அசிங்கப்படக்கூடிய ஒன்று. இதில் நான் எப்படி உதவி செய்யலாம் எனக் கூறுங்கள் எனக் குறிப்பிட்டு இருந்தார். ப்ரிணிதி சோப்ராவின் ஆதரவை தொடர்ந்து  பலரும் அவர்களது ஆதரவை பதிவு செய்து வருகின்றனர்.

 

Published by
adminram

Recent Posts