வெளிநாட்டில் இருந்து திரும்பிய பாலிவுட் பாடகி கனிகா கபூர் கொரோனா வைரஸோடு பார்ட்டிக்கு சென்றதால் அவர் மேல் வழக்குப் பதிவு செய்யபப்ட்டுள்ளது.
மும்பையைச் சேர்ந்த பிரபல பின்னணிப் பாடகி கனிகா கபூர் சில நாட்களுக்கு முன் லண்டன் சென்றுவிட்டு இந்தியா திரும்பினார். அவரி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் அவர் அதை மீறி லக்னோவில் நடந்த பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். இப்போது அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவருடன் அந்த பார்ட்டியில் கலந்துகொண்ட ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே மற்றும் அவர் மகனும் நாடாளுமன்ற எம்பியுமான துஷ்யந்த் ஆகியோர் உள்பட அனைவரும் வீட்டுக்குள் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். இதில் துஷ்யந்த் நாடாளுமன்றத்துக்குச் சென்று வந்ததாலும், குடியரசுத் தலைவர் ஏற்பாடு செய்த விருந்தில் கலந்து கொண்டதாலும் இந்த விவகாரம் மேலும் விபரீதத்தை உண்டாக்கியுள்ளது.
இதனால் போலிஸார் கனிகா மீது 3 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இப்போது கனிகா தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.
நடிகர் பார்த்திபன்…
'ஒண்ணே ஒண்ணு…
டைட்டிலைப் பார்த்ததுமே…
Kollywood: கோலிவுட்டை…
தனுஷ் இயக்கத்தில்…