நாளுக்கு நாள் கூடும் நட்சத்திர பட்டாளம்… பிரபாஸ் படத்தில் இணைந்த பாலிவுட் சூப்பர்ஸ்டார்!
மகாநடி என்ற படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கும் புதிய படத்தில் பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோர் நடிக்கின்றனர்.
பாகுபலிக்கு பின் பிரபாஸின் மார்க்கெட் எக்குத்தப்பாக எகிறியுள்ளது. இதனால் அவரின் படங்கள் இந்தியா முழுவதும் ரிலிஸாகும் பேன் இந்தியா படங்களாக மாறியுள்ளன. இதையடுத்தது பிரபாஸ் நடிக்கவிருக்கும் 21 வது படம் குறித்த அதிரடி அறிவிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.. இந்த படத்தை மகாநடி படத்தின் இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கும் இந்த படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இது ஒரு பிரம்மாண்டமான காதல் கதையாக உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது.
பிரபாஸ் நடிக்கவிருக்கும் 21 வது படமாக உருவாக இருக்கும் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதையடுத்து இப்போது இந்த படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு வெளியான சைரா நரசிம்மா ரெட்டி படத்தில் அமிதாப் பச்சன் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.