வீடு அருகில் விழும் குண்டு.. மகளை சிரிக்க வைத்து திசை திருப்பும் தந்தை.. பதறவைக்கும் வீடியோ

1fccd1aff612c6284af22125a83c6b5f

சிரியாவில் தற்போது உள்நாட்டுப்போர் உச்ககட்டத்தை எட்டியுள்ளது.குர்திஷ் போராளிகளுக்கும், சிரிய அரசுக்கும் இடையே தற்போது மோதல் ஏற்பட்டுள்ளது. போராளிகள் கைப்பற்றிய பகுதிகளை சிரிய அரசு தங்கள் வசம் கைப்பற்றி வருகின்றனர்.

இந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்து விட்டனர். பலரும் பாதுகாப்பான இடங்களை நோக்கி வெளியேறி வருகின்றனர். இந்நிலையில், சிரியாவின் ஒரு பகுதியில் அப்துல்லா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 4 செல்வா எனும் 4 வயது மகள் உண்டு. இவரின் வீட்டின் அருகே சமீபத்தில் சிரிய அரசு குண்டு மழை பொழிந்தது. ஆனால், இதைக்கண்டு தனது மகள் பயப்படக்கூடாது எனக்கருதிய அப்துல்லா அதையே காட்டி விளையாடினார்.

விமானத்தை கண்டு ‘விமானம் செல்கிறதா அல்லது தாக்குல் நடக்கிறதா என அப்துல்லா கேட்க, அதற்கு குழந்தை ‘இது வான்வெளி தாக்குதல்’ எனக்கூறுகிறது. அப்போது வீட்டின் அருகே குண்டு விழும் சப்தம் கேட்கிறது. அப்போது ‘இது வேடிக்கை அல்லவா?’ என சிரித்துக்கொண்டே அவர் கேட்க ‘ குழந்தையும் சிரித்துக்கொண்டே ‘ஆம் இது மிகவும் வேடிக்கையானது’எனக்கூறுகிறது.

இந்த வீடியோ தற்போது வெளியாகி பலரையும் பதபதைக்க வைத்துள்ளதோடு நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Articles
Next Story
Share it