போனா போகுதுன்னு இருக்கேன்..நினைத்தால் மீண்டும் வருவேன்!மூத்த இயக்குனர் சவால் !

Published on: January 29, 2020
---Advertisement---

f713339c2b5eeca7b89ec43e39e4d36d

இயக்குனர் எஸ் பி முத்துராமன் தன்னால் மீண்டும் படம் இயக்க முடியும் என சவால் விடுத்துள்ளார்.

மறைந்த ஓவியர் மற்றும் நடிகர் வீர சந்தானம் நடிப்பில் ஞானச்செருக்கு என்ற படம் உருவாகியுள்ளது. சில வருடங்களுக்கு முன்பே முடிந்தாலும் இன்னும் வெளியாகாமல் இருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது. வயது முதிர்வால் ஓய்வு பெற்ற இயக்குனர் ஒருவர் மீண்டும் படம் இயக்கி சாதிக்கும் கதைக்களம் கொண்ட இந்த படத்தின் விழாவில் முன்னாள் இயக்குனர்கள் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய இயக்குனர் எஸ் பி முத்துராமன், ‘னக்கு இப்போது பிறந்த தேதிப்படி 85 வயதாகிறது. உடல் ஆரோக்கியத்தின் படி எனக்கு வயது 55. என் மனதின் படி வயது 35. இந்த இளைய தலைமுறை படைப்பாளிகளை பார்க்கும்போது வந்த சந்தோஷத்தில் என் வயது 18 ஆகிவிட்டது. இந்த படத்தை பார்த்த பிறகு மீண்டும் ஒரு முறை வரவேண்டும் என்கிற எண்ணம் எனக்கு ஏற்பட்டுள்ளது.இன்று இயக்குனர்கள் செய்யும் கிராஃபிக்ஸ் வேலைகளை எல்லாம் நான் அன்றே செய்துவிட்டேன். அப்படியென்றால் இப்போது கிராஃபிக்ஸை வைத்துக்கொண்டு நான் எந்த அளவிற்கு வேலை செய்வேன்?. ஏதோ போனால் போகிறது என்று அமைதியாக இருக்கிறேன். ஆனால் இந்தப்படம் என்னை மீண்டும் உற்சாகமாக வேலை செய்ய தூண்டியுள்ளது.’ எனத் கூறியுள்ளார்.

Leave a Comment