More

மனுசன் இப்பாவது வாய திறந்தாரே!.. வலிமை பட மாஸ் அப்டேட் கொடுத்த போனி கபூர்….

அஜித்தின் 60வது படமாக உருவாகிறது வலிமை. இதை ஹெச்.வினோத் இயக்குகிறார். போனி கபூர் தயாரித்து வரும் இப்படத்திற்கு யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார். ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் தல நடித்து வருகிறார். கொரோனாவால் நிறுத்தப்பட்டு இருந்த படப்பிடிப்பு கடந்த மாதம் சென்னையில் தொடங்கப்பட்டது. 

Advertising
Advertising

வலிமை படத்தின் பெயரை தவிர படக்குழு இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. ரசிகர்களும் யார் யாரிடமோ சிபாரிசு கூட சென்று விட்டார்கள். ஆனால் அறிவிப்பு தான் வந்த பாடில்லை. எனவே, வலிமை அப்டேட்டுக்காக அவர்கள் தவம் கிடக்கிறார்கள்.

சமீபத்தில் அவர்களை குஷிபடுத்தும் வகையில், வலிமை படத்தின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.  அதாவது அம்மா வேடத்தில் நடிக்கும் சுமத்ரா அருகில் அஜித் மற்றும் மற்ற நடிகர்கள் அமர்ந்திருந்தனர். படத்தின் எந்த அப்டேட்டும் கிடைக்காத நிலையில், இப்புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், வலிமை படம் பற்றி ஃபோர்ப்ஸ் பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்த இப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் ‘பிப்ரவரி 15ம் தேதிக்குள் படப்பிடிப்பு முடிவடைய உள்ளது. ஒரு சண்டை காட்சியை மட்டும் வெளிநாட்டில் படமாக்க வேண்டும். போஸ்ட் புரடெக்‌ஷன் விரைவில் துவங்கவுள்ளது. படம் எப்போது வெளியாகும் என்பது விரைவில் இறுதி செய்யப்படவுள்ளது’ என தெரிவித்துள்ளார்.

போனிகபூர் கொடுத்த இந்த அப்டேட் தல ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published by
adminram

Recent Posts