
போனிகபூர் தயாரிப்பில் 3 திரைப்படங்கள் நடிப்பது என 3 வருடங்களுக்கு முன்பு நடிகர் அஜித் முடிவெடுத்தார். முதல் படமாக ஹெச்.வினோத் இயக்க ‘நேர்கொண்ட பார்வை’ படம் உருவானது. அப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
எனவே, அடுத்து போனிகபூர், வினோத், அஜித் மூவரும் வலிமை படத்திற்காக 2வதாக இணைந்தனர். ஆனால், கொரோனா ஊரடங்கால் வலிமை படத்தின் படப்பிடிப்பு தடைபட்டது, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடவே ஒன்றரை வருடம் ஆனது. எனவே, அஜித் ரசிகர்கள் போனிகபூர் மீது அதிருப்தி கொண்டனர்.

அவர்கள் பலமுறை அவரிடம் வலிமை படத்தின் அப்டேட்டை கேட்டும் மனுஷன் வாயை திறக்கவே இல்லை. அதேபோல், அடுத்து மீண்டும் அஜித் படத்தை தயாரிப்பது பற்றி அவர் எந்த தகவலும் கூறவில்லை. ஒருவழியாக தற்போது அப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையவுள்ளது.இன்று மாலை 7 மணிக்கு இப்படத்தின் பாடல் ஒன்றை படக்குழு வெளியிடவுள்ளது.
இந்நிலையில், தற்போது போனிகபூர் சில முக்கிய தகவலை கூறியுள்ளார். வலிமை படப்பிடிப்பு மீண்டும் துவங்கவுள்ளது. இன்னும் 10 நாட்களில் படப்பிடிப்பு நிறைவடைந்துவிடும். அதற்கு அடுத்து அஜித்துடன் மற்றொரு படத்திலும் அவருடன் பணியாற்றவுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.





