வலிமை படத்தால் பல கோடி நஷ்டம்… அஜித் என்ன செய்தார் தெரியுமா?…

ஸ்ரீதேவிக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற அவரின் கணவர் போனிகபூரின் பட நிறுவனத்துக்கு ‘நேர் கொண்ட பார்வை’ படத்தில் நடித்து கொடுத்தார் அஜித். அதன்பின், மீண்டும் போனிகபூர் தயாரிப்பில் தற்போது ‘வலிமை’ திரைப்படம் உருவாகி வருகிறது. 2 படங்களுக்கும் வினோத்துதான் இயக்குனர்.

கடந்த வருடம் துவக்கத்திலேயே ‘வலிமை’ பட வேலைகள் துவங்கியது. ஆனால், கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு தடைபட்டுக்கொண்டே இருந்தது. கடந்த வருடம் நவம்பர் மாதம் படப்பிடிப்பு மீண்டும் துவங்கி பிப்ரவரி வரை நடைபெற்றது. மார்ச் மீதும் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. 

இப்படத்தில் பல காட்சிகள் ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் எடுக்கப்பட்டுள்ளது. படம் 90 சதவீதம் முடிந்துவிட்ட நிலையில் சில காட்சிகள் வெளிநாட்டில் எடுக்கப்பட வேண்டியுள்ளது. அதன் அனுமதிக்காக படக்குழு காத்திருக்கிறது.

இப்படத்தை வெளியிட போனிகபூர் திட்டமிட்ட தேதியிலிருந்து 14 மாதங்கள் வலிமை படம் தாமதமாகி விட்டதாம். எனவே, இப்படத்திற்காக வாங்கிய பணத்திற்கு வட்டி மட்டுமே ரூ.25 கோடியை தாண்டி விட்டதாம். 

இதை உணர்ந்த அஜித், போனிகபூரை அழைத்து ‘என் அடுத்த படத்தையும் நீங்கள்தான் தயாரிப்பாளர்.. ஆனால், 2 மாதத்திற்குள் சிக்கல் இல்லமால் படப்பிடிப்பை முடிக்கும் படி கதையை தேர்ந்தெடுங்கள்’ எனக்கூற, மீண்டும் வினோத்தே இயக்க அப்படத்தின் கதை தயாராக இருக்கிறதாம். வலிமை பட வேலைகள் முடிந்தவுடன் அப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
adminram