அதுக்கு மட்டும் அத்தனை கோடியா?.. பட்ஜெட்டால் ஜகா வாங்கிய பட நிறுவனம்!.. ரஜினியின் புதிய பட அப்டேட்…

Published on: July 26, 2021
---Advertisement---

9f6df0e077dc3ffb1cc706c8b71e7686-2

ரஜினி தற்போது ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. சிறுத்தை, வேதாளம், வீரம், விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கிய சிவா இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தின் இறுதி படப்பிடிப்பு 4 நாட்கள் கொல்கத்தாவில் நடைபெறுவதாகவும், ரஜினி கொல்கத்தா செல்ல வேண்டியிருந்தது. ஆனால், தற்போது அது மாற்றம் செய்யப்பட்டு சென்னையிலேயே படப்பிடிப்பு நடந்து வருகிறது.

அண்ணாத்த படத்திற்கு பின் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

திடீரென இப்படத்தின் வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளது. இப்படத்தில் ஒரு பிளாஷ்பேக் காட்சி இருக்கிறதாம். அதற்கு மட்டுமே பல கோடிகள் செலவு செய்ய வேண்டியுள்ளதாம். ரஜினியுடன் சம்பளத்தோடு சேர்த்து பார்த்தால் படத்தின் பட்ஜெட் ரூ.250 கோடியை நெருங்குகிறதாம். எனவே, இவ்வளவு கோடிகள் செலவு செய்து போட்ட பணத்தை எடுப்பதோடு, லாபம் பெற முடியுமா என ஏஜிஎஸ் நிறுவனம் தயங்குகிறதாம்.  எனவே, இப்பட வேலைகள் தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. கடைசியாக வெளியான ரஜினி படமான தர்பார் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment