தூக்குப்போட்டு தம்பி தற்கொலை – சோகத்தில் அண்ணன் எடுத்த முடிவு !

சென்னை காசிமேட்டில் தனது தம்பி தற்கொலை செய்துகொண்டதை அடுத்து  அவரது அண்ணனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது.

சென்னை காசிமேட்டை சேர்ந்தவர் ஆரோக்கிய ஆகாஷ். இவர் தனது மூத்த அண்ணனிடம் மிகவும் நெருக்கமாக நண்பர் போல பழகி வந்துள்ளார். இந்நிலையில் ஆகாஷ் மர்மமான முறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இந்நிலையில் ஆகாஷின் மேல் மிகவும் அன்பாக இருந்த அவரது அண்ணனும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதையறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து இரு தற்கொலைகளுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published by
adminram