பட்ஜெட் 2020 – தனி நபர் வருமான வரி குறைப்பு

மத்திய அரசின் பட்ஜெட் என்றாலே பொதுவாக எல்லோரும் எதிர்பார்ப்பது தனி நபர் வருமான வரி குறைப்பு இருக்கிறதா என்றுதான். இந்த பட்ஜெட்டிலும் அதுவே பெரும்பாலோரின் எதிர்பார்ப்பாக இருந்தது.

இந்நிலையில்,  தனி நபருக்கான வருமான வரி குறைக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீத்தாராமன் அறிவித்துள்ளார். அதன்படி,

ரூ.5 லட்சம் வரை வருமான வரி இல்லை.

ரூ.5 லட்சத்திலிருந்து 7.5 லட்சம் வரை வருமானவரி 20 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 

 ரூ.7.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருமானம் இருந்தால் 20 சதவீத வரி 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 

ரூ. 10 லட்சம் முதல் 12.5 லட்சம் வரை வருமானம் இருந்தால் வரிமான வரி 30 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வருமானம் இருந்தால் வரிமான வரி  30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ரூ.15 லட்சத்துகு மேல் 30 சதவீத வரி என்பதில் மாற்றம் எதுவுமில்லை என இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Published by
adminram