பிரபல லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி,நயன்தாரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள திரைப்படம் தர்பார். இப்படம் வருகிற 9ம் தேதி வெளியாகவுள்ளது. அதேபோல் தனுஷ் நடித்த பட்டாஸ் திரைப்படம் 15ம் தேதி வெளியாகவுள்ளது. எனவே, பொங்கலுக்கு இந்த 2 படங்கள் வெளியாக தமிழகத்தின் மொத்த திரையரங்குகளை ஆக்கிரமிக்கவுள்ளது.
இதில், தர்பார் திரைப்படம் ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. இதில் ரஜினி சம்பளம் மட்டுமே ரூ.100 கோடி எனக்கூறப்படுகிறது. ஆனால், இதுவரை இத்திரைப்படம் சென்னையை தவிர்த்து ரூ.57.45 கோடி அளவுக்கு மட்டுமே விற்பனை ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில், லைக்கா நிறுவனமே நேரடியாக வெளியிடவுள்ளது.
லைக்கா நிறுவனத்தில் தற்போது அனுபவமில்லாதவர் பணிபுரிவதாலும், ஒரு திரைப்படத்தை எப்படி விற்பனை செய்ய வேண்டும் எப்படி லாபம் ஈட்ட வேண்டும் என்கிற தொழில் நேக்கு போக்கு தெரியாதவர்கள் இருப்பதாலும் இப்படி நடக்கிறது என விபரம் அறிந்த வினியோகஸ்தர்கள் கூறுகின்றனர். படம் வெளியாக இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், இந்த வியாபாரம் லைக்காவுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம்.
பொங்கலன்று வெளியான பேட்டையை விட அஜித் நடித்த விஸ்வாசம் படமே வினியோகஸ்தர்களுக்கு நல்ல வசூலை கொடுத்தது. எனவேதான், அதிக விலை கொடுத்து தர்பார் திரைப்படத்தை வாங்க முன்வரவில்லை என விபரம் அறிந்த சினிமா வட்டாரம் தெரிவிக்கிறது.
Surya: நடிகர்…
சொர்க்கவாசல் படத்தின்…
Lokesh kanagaraj:…
தனுஷ் தயாரிச்ச…
மருத்துவராக இருந்தாலும்…