ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீரவிளையாட்டு. இது பண்டைய காலம் முதல் இன்று வரை தொன்று தொட்டு வருகிறது. கடந்தமுறை இதற்கு தடை விதிக்கப்பட்ட போது தமிழினமே ஒட்டுமொத்தமாக எதிர்ப்புக்குரல் கொடுக்கவே தடை நீங்கியது நமக்குத் தெரிந்த விஷயம்தான். எத்தனை இடையூறுகள் வந்திடினும் வீர விளையாட்டை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று முழக்கமிட்டது தமிழினம். போராட்டம் ஓங்கி ஒலிக்கக் காரணம் ஒட்டுமொத்தமாய் இணைந்த ஒரே குரல் தான். தமிழன் என்று சொல்லடா…தலை நிமிர்ந்து நில்லடா என்ற நாமக்கல் கவிஞரின் வரிகளை நிஜமாக்கியது.
ஏறு தழுவதல் என்ற பெயரில் சீறி வரும் காளையை பாய்ந்து அணைத்து தழுவும் வீரமே வீரனுக்கு அழகு. தவிர, காளையை நாங்கள் துன்புறுத்துவது ஒரு போதும் இல்லை என்றனர் தமிழர்கள். ஜல்லிக்கட்டின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு படங்கள் முழுவதுமாக வராவிட்டாலும், ஆங்காங்கே ஒரு சில காட்சிகளை படத்தின் கதாநாயகனின் வீரத்தைப் பிரதிபலிக்க வைத்து விடுவார்கள். அப்படிப்பட்ட படங்களைத் தான் நாம் இங்கு பார்க்கப்போகிறோம். ஒரு சில படங்கள் உங்கள் பார்வைக்காக…
முரட்டுக்காளை
1980ல் ஏவிஎம் தயாரிப்பில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வெளியான படம் முரட்டுக்காளை. ரஜினிகாந்த், ரதி அக்னிகோத்ரி, ஜெய்சங்கர், சுருளிராஜன், தேங்காய் சீனிவாசன், சுமலதா உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை அமைப்பாளர் இளையராஜா. ராஜாவின் இன்னிசையில்
படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டையைக் கிளப்பின. இந்தப்பூவிலும், மானே மச்சான்.., புது வண்ணங்கள், நீ யார்க்கிட்ட பேசுது, நா எப்படி டக்குனு, கல்யாணமா என்ன டா, பொதுவாக எம் மனசு தங்கம் ஆகிய பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன.
படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அறிமுகக்காட்சியில் ஜல்லிக்கட்டு போல் நடக்கும் பந்தயத்தில் யாராலும் அடக்க முடியாத காளையை ரஜினிகாந்த் அடக்கி விடுவார். உடன் வெற்றி வாகை சூடிய அவரது வீரத்தைப் போற்றும் வகையில் மக்கள் கொண்டாடி ஆடிப் பாடும் பாடல் தான் பொதுவாக எம் மனசு தங்கம்…ஒரு போட்டியின்னு வந்து விட்டா சிங்கம்…உண்மையே சொல்வேன்…நான் நன்மையே செய்வேன்…வெற்றி மேல் வெற்றி வரும்…! என்ற பாடல் திரையரங்கையே அதிர வைத்து விடும். படம் பார்க்கும் ரசிகர்கள் ஒன்ஸ்மோர் கேட்க மறப்பதில்லை.
2012ல் செல்வபாரதி இயக்கத்தில் சுந்தர் சி., சிநேகா நடித்த முரட்டுக்காளை வெளியானது. இது பழைய முரட்டுக்காளையின் ரீமேக் தான்.
ஜல்லிக்கட்டு
இறைச்சிக் கூடத்துக்கு வந்த ஓர் எருமை தப்பித்து அந்த ஊரையே அதிர்ச்சியில் உறைய வைத்தது. இதுவே அவர்களது ஜல்லிக்கட்டு ஆனது.
விருமாண்டி
விருமாண்டி படத்தில் கமல்ஹாசன் ஜல்லிக்கட்டை அறிமுகக் காட்சியில் தத்ரூபமாகக் காட்சிப்படுத்தியிருப்பார். படத்தில் முத்தாய்ப்பான சீன் இது. மதுரையின் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டான அலங்காநல்லூர் வாடிவாசலை அப்படியே எடுத்திருப்பார்கள். 2004ல் வெளியான இப்படத்தை நடித்து, தயாரித்து, இயக்கியும் இருப்பார் நம்மவர் கமல்ஹாசன். உடன்
அபிராமி, பசுபதி, நெப்போலியன், ரோகிணி உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தின் கதை வித்தியாசமானது. வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும், சாதி அரசியல், மரண தண்டனை போன்ற விவாதக்கருத்துகளால் படத்திற்கு நிறைய சர்ச்சைகள் வந்தன. இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் அனைத்தும் விறுவிறு என்றிருந்தன. மன்னிப்புக் கேட்கறவன் மனுஷன்னா மன்னிக்கறவன் கடவுள் என்பதே படத்தின் மையக்கரு. படத்தில் கொம்புல பூவ சுத்தி, விரு விரு மாண்டி விருமாண்டி, அன்ன லெட்சுமி, ஒன்ன விட, சண்டியரே… கர்ப்பக்கிரகம் விட்டு சாமி வெளியேறது, கருமாத்தூர் காட்டுக்குள்ளே, மாட விளக்கே, மகராசியே மண்ண விட்டு போனியே.., நீதியில்லே போட்டு வை… ஆகிய பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன.
ஜல்லிக்கட்டுக்காளை
1994ல் மணிவாசகம் இயக்கிய படம் ஜல்லிக்கட்டுக்காளை. பிரபு, கனகா, கவுண்டமணி, மனோரமா, மலேசியாவாசுதேவன், செந்தில், விஜயசந்திரிகா, ஆனந்தராஜ், பிரசன்னா, செண்பகம் உள்பட பலர் நடித்துள்ளனர். தேவாவின் இன்னிசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ரகங்கள்.
தூக்கணாங்குருவி, சிறு மல்லி பூவே, அன்னக்கிளி சேலை கட்டி, நடையா இது நடையா, நிம்மதி என்ன விலை ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. காளைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படம் இது.
கருப்பன்
விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான கருப்பன் படத்தில் விஜய் சேதுபதி சீறிப்பாய்ந்து வரும் காளையை அதன் தோள் மீது லாவகமாக தவ்வி ஏறித் தழுவிக் கொண்டே வெற்றி பெறுவார். படத்தின் அதிரடி சீனாகக் கொண்டு விஜய்சேதுபதி அறிமுகமாவார். 2017ல் வெளிவந்த இப்படத்தில், விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, தன்யா ரவிச்சந்திரன், பசுபதி, காவேரி, சிங்கம்புலி உள்பட பலர் நடித்துள்ளனர்.
வாடிவாசல்
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அதிரடித் திரைப்படம். இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு. நடிகர் சூர்யாவுக்கு இது 40வது திரைப்படம். ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் காளைகளை அவிழ்த்து விடும் பகுதிக்கு வாடிவாசல் என்று பெயர். அதனால்…படமானதுஜல்லிக்கட்டு என்ற வீரவிளையாட்டை அடிநாதமாகக் கொண்டு கதை பின்னப்பட்டிருக்கும் என்று கருதப்படுகிறது.
படத்தின் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார்.
தொடர்ந்து திரைப்பிரபலங்கள்…
ஜன நாயகனை…
கடந்த 15…
பொங்கல் ரிலீஸாக…
நடிகர் ரஜினிகாந்த்…