அதையடுத்து, அண்ணாநகர் பகுதியில் உள்ள வேளாங்காடு கல்லறையில் அவரின் உடலை அடக்கம் செய்ய எடுத்து சென்றனர். ஆனால், அவரது உடலை இங்கு புதைக்கக் கூடாது எனக்கூறி அப்பகுதிமக்கள் சுமார் 20 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஆம்புலன்ஸின் கண்ணாடியை அடித்து உடைத்தனர். எனவே, ஆம்புலன்ஸில் இருந்த இருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அதன்பின் வேறு பகுதியில் அவரின் உடல் புதைக்கப்பட்டது. இதுதொடர்பாக 20 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரம் மருத்துவர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியின் ஒரு பகுதியை உடல் அடக்கம் செய்ய எடுத்துகொள்ளலாம் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
இதையடுத்து சமூக வலைத்தளங்களில் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Director Atlee:…
பேய்ப்படங்களைப் பார்ப்பது…
நானும் விஜய்…
நடிகர் நாகார்ஜுனாவின்…
இன்று வெற்றிமாறன்…