
தர்பார் படம் பார்த்து ரசிகர் ஒருவர் சொன்ன கமெண்ட் சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
ரஜினிகாந்தின் தர்பார் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. 22 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி போலீஸ்காரராக நடித்துள்ள இந்த படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்த நிலையில் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் படத்தின் முதல்பாதி நன்றாக இருப்பதாகவும் இரண்டாவது பாதி சொதப்பலாக அமைந்துள்ளதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதில் ஒருவர் தெரிவித்த கருத்து சமூகவலைதளங்களில் பெரிதும் ரசிக்கப்பட்டது.
தியேட்டரில் இருந்து வெளியில் வரும் ‘பர்ஸ்ட் ஆஃப் செம்ம… ரஜினிய பயங்கரமா பாக்கலாம்’ என சொல்ல, அவரிடம் ’ஏன் சோகமா இருக்கீங்க’ தொகுப்பாளர் கேட்க ‘செகண்ட் ஆஃப்ல கொஞ்சம் தூங்கிட்டேன்’ என சொல்லி செல்கிறார். இதைப்பார்த்து இவர் படத்தைக் கலாய்க்கிறாரா இல்லை புகழ்கிறாரா எனப் புரியாமல் குழம்ப வேண்டியுள்ளது.