More

வலிமை படத்துல ஒரு காட்சி இருக்கு… தியேட்டரே அதிரும்… அது என்ன தெரியுமா?….

போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிக்கும் இரண்டாவது படம் வலிமை. இப்படத்தை ‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பின் வினோத் இயக்குகிறார். படத்தில் நடிக்கும் நடிகர்கள், ஏன் அஜித்தின் ஜோடிக்கூட இதுவரை யார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இதை தொடர்ந்து, சில புகைப்படங்கள் லீக்காகி ரசிகர்களை குஷியாக்கியது. இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார்.  அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என கருதப்படுகிறது.

படப்பிடிப்பு முடிந்தவரை தனது டப்பிங் பணியை அஜித் முடித்து கொடுத்துவிட்டார். எடுத்தவரை எடிட்டிங் செய்து விட்டதாக தெரிகிறது. தற்போது மற்ற நடிகர்கள் டப்பிங் பேசும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஸ்பெயின் நாட்டில் சில காட்சிகளை எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக அங்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். 

இந்நிலையில், திரைப்படங்களில் அஜித் இதுவரை பைக் மற்றும் கார் ரேஸிங் செய்துள்ளார். ஆனால், வலிமை படத்தில் பஸ் ஒன்றை வேகமாக ஓட்டி அசத்தியுள்ளராம். வினோத் ஏற்கனவே இயக்கிய ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் விறுவிறுப்பான ஒரு பேருந்து சேஸிங் காட்சி இடம் பெற்றிருக்கும். அதை விட சிறப்பாக வலிமை படத்தில் பேருந்து சண்டை காட்சி வந்துள்ளதாம் . இந்த காட்சியில் தியேட்டரே அதிரும், தல ரசிகர்களுக்கு இப்படம் விருந்தாக அமையும் என அப்படத்தின் சண்டை காட்சி இயக்குனர் திலீப் சுப்பராயன் கூறியுள்ளார். இது அஜித் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

Published by
adminram

Recent Posts