தமிழில் தமன்னாவின் திரையப்பணத்தில் திருப்பு முனையாக கார்த்தியின் ‘பையா ‘ படம் அமைந்தது அதன் பிறகு அஜித், விஜய், சூர்யா போன்ற தமிழ் சினிமாவின் உச்ச நட்சித்தரங்களுடன் இணைந்து நடித்தார். அதனை தொடர்ந்து பிரம்மாண்ட சரித்திர படமான பாகுபலி தமன்னாவை புகழின் உச்சத்தில் கொண்டு சேர்த்தது.
பாகுபலி படத்திற்கு பிறகு தமன்னாவின் மார்க்கெட் உச்சத்திற்கு சென்றதால் இந்திய சினிமாவின் உச்ச நடிகையாக விளங்கி வருகிறார். இந்நிலையில் சுஷாந்த் சிங் மறைவிற்கு பிறகு பாலிவுட் திரைத்துறையில் பிரபலங்களுக்கு நேர்ந்த அரசியல் வாரிசுகளின் அநியாங்களை குறித்து ஏ.ஆர் ரஹமான் , ரசூல் பூக்குட்டி உள்ளிட்ட பலரும் கருத்து கூறினர்.
அந்தவகையில் தற்ப்போது நடிகை தமன்னா தான் சந்தித்த அவமானம் குறித்து கூறியுள்ளார் ” “ பாலிவுட்டில் விருதுகள் கொடுப்பதில் எனக்கு பல தடவை அநியாயம் நடந்துள்ளது. நிறைய தடவை விருதுகளுக்கு என்னுடைய பெயர் பரிந்துரைக்கபட்டும் எனக்கு கொடுக்காமல் அசிங்கப்படுத்தினார்கள். திறமையான கலைஞனுக்கு விருது முக்கியமல்ல ரசிகர்கள் ஆதரவு தான் முக்கியம். அவர்கள் எவ்வளவு நாள் ஆதரிக்கிறார்களோ அவ்வளவு நாள் நிலைத்து இருக்கலாம். ரசிகர்கள் ஆதரவை விட விருதுகள் ஒன்றும் பெரியது கிடையாது என்றார் தமன்னா.
Vetrivasanth: சின்னத்திரையில்…
அமரன் திரைப்படத்தின்…
அமரன் திரைப்படத்தில்…
VijayTV: தொலைக்காட்சியில்…
எழுத்தாளரும், நடிகருமான…