Home News Reviews Throwback Television Gallery Gossips

பிரச்சாரம் செய்தது 18-ல் ; வெற்றிபெற்றது 2-ல் – முடிவுக்கு வருகிறதா மோடி அலை ?

Published on: December 24, 2019
---Advertisement---

8c20329a00f41fe49b5339fbb33017ee

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 18 இடங்களில் மோடி அமைச்சகம் தேர்தல் பிரச்சாரம் செய்த நிலையில் அந்த 18 தொகுதிகளில் இரண்டு இடங்களில் மட்டுமே பாஜக வென்றுள்ளது.

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவில் காங்கிரஸ் 16, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 30, ஆர்ஜேடி 1, பாஜக 25, சுயேச்சை 2, ஏஜெஎஸ்யு 2, தேசியவாத காங்கிரஸ் 1, சிபிஐ(எம்) 1 ஆகிய இடங்களில் வென்றுள்ளன. ஆட்சியமைக்கப் பெரும்பான்மை 41 என்ற நிலையில் காங்கிரஸ் கூட்டணி 47 இடங்களில் வென்றுள்ளது. இதன் மூலம் மேலும் ஒரு மாநிலத்தில் ஆட்சியமைக்கும் வாய்ப்பை பாஜக இழந்துள்ளது.

இந்தத் தேர்தல் முடிவுகளில் ஆச்சரியப்படத்தக்க விதமாக ஒரு புள்ளிவிபரம் வெளியாகியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் தனது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகிய இருவரையும் பிரச்சாரத்தில் ஈடுபடுத்திக் கொண்டது ஜார்க்கண்ட் மாநில பாஜக.  அவர்கள் இருவருமாக சேர்ந்து மொத்தமாக பதினெட்டு இடங்களில் வாக்கு பிரச்சாரம் செய்தனர். ஆனால் அவர்கள் வாக்கு பிரச்சாரம் செய்த 18 இடங்களில் இரண்டு இடங்களில் மட்டுமே பாஜக வென்றுள்ளது. இதன் மூலம் நாட்டில் எழுந்துள்ளதாக சொல்லப்பட்ட மோடி மற்றும் அமித் ஷா மறைந்துவிட்டது பலரும் கருத்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment