More

சூரிய கிரகணத்தை இப்படியும் போட்டோ எடுக்க முடியுமா? – லைக்ஸ் குவிக்கும் வைரல் புகைப்படம்

2019ம் வருடத்தின் கடைசி சூரிய கிரகணம் நேற்று காலை 8 மணி முதல் 11 மணி வரை நீடித்தது. தமிழகத்தில் சில இடங்களில் மட்டும் பொதுமக்களால் இதை காண முடிந்தது. இந்த கங்கண சூரிய கிரகணம் நிகழ்வு ஒரு அற்புதமான வானியல் நிகழ்வு ஆகும். இந்த நிகழ்வு 36 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழக்கூடியது. மேலும்,  இதனை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது என விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.

Advertising
Advertising

இந்நிலையில், இந்த சூரிய கிரகணத்தை வித்தியாசமான கோணத்தில் படம் பிடிக்க நினைத்த ஜோஷ்வா கிரிப்ஸ் என்கிற புகைப்பட கலைஞர் இதற்காக ஐக்கிய அரபு அமீரகத்தின் பாலைவனத்தை தேர்ந்தெடுத்தார். 

அங்கு ஒட்டகத்தை பிடித்துக்கொண்டு ஒருவர் நிற்கும்படி செய்து, அவர் பின்னால் சூர்ய கிரகணம் தோன்றும் போது அதை கச்சிதமாக படம் பிடித்தார். இந்த தகவலை அவர் ஏற்கனவே தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Published by
adminram

Recent Posts