ரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மது அருந்தலாம் என சமூக வலைதளங்களில் பரவிய செய்தியை உலக சுகாதார அமைப்பு மறுத்துள்ளது.
சீனாவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இதுவரை 3500 க்கும் மேற்பட்டவர்களின் உயிரை பலி வாங்கியுள்ளது. இந்நிலையில் இப்போது இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவல் பற்றிய பீதி உண்டாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை 31 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் வைரஸ் தாக்குதல் அதிக வெப்பமான பகுதிகளில் பரவாது என்று கூறப்பட்டதை அடுத்து வெயிலில் நடக்க வேண்டும் என்றும், அது போல மது அருந்தினால் இவ்வைரஸ் பரவாது என்றும் சமூகவலைதளங்களில் பரவி வந்தது. ஆனால் மது அருந்தினால் வைரஸ் பரவலை தடுக்கலாம் என்ற செய்திக்கு உலக சுகாதார நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மேலும் அது போல செய்வது இன்னும் அதிக ஆபத்தை விளைவிக்கலாம் என சொல்லப்படுகிறது.
டைட்டிலைப் பார்த்ததுமே…
Kollywood: கோலிவுட்டை…
தனுஷ் இயக்கத்தில்…
Sivakarthikeyan: விஜய்…
ஐயப்பனை கொச்சைப்படுத்தும்…