கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு கடந்த சில மாதங்களாக தன்னால் இயன்ற உதவிகளை வழங்கி வருகிறார் நடிகர் சோனு சூட்.
கொரோனா லாக்டவுன் காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல முடியாமல் தவித்த போது அவர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்து வந்தவர் நடிகர் சோனு சூட். இதையடுத்து அதுபோல தங்கள் வாழ்வாதாரங்களை இழந்த மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார். இதனால் சமூகவலைதளங்களில் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இவ்வாறு உதவி செய்யும் அவரை சமூக வலைதளத்தில் மஞ்சு ஷர்மா என்ற பெண் கேலி செய்யும் விதமாக ‘எனது போனில் இண்டர் நெட் வேகத்தை அதிகரிக்க செய்ய முடியுமா?’ என டிவீட் செய்து அவரை டேக் செய்திருந்தார். இந்த கேள்வியால் கோபம் அடையாத சோனு சோனு. தனது பதிலில் ‘இப்போது நான் ஒரு பெண்ணின் கம்ப்யூட்டரை ரிப்பேர் செய்வது, ஒரு பெண்ணின் திருமணத்தை முடித்து வைப்பது மற்றும் ஒரு வீட்டு குழாயில் நீர் வரவைப்பது போன்ற பிரச்சனைகளில் பிஸியாக இருக்கிறேன். அதனால் நாளை காலை வரை பொறுக்க முடியுமா?’ எனக் கூறியுள்ளார்.
தளபதி 69…
சூர்யா அடுத்து…
சர்தார் 2…
தனுஷ், ஐஸ்வர்யா…
துல்கர் சல்மான்…