சமீபத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த குடியுரிமை சீர்திருத்த மசோதாவிற்கு எதிராக மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் போராட்டம் செய்து வருகின்றனர். இந்த போராட்டம் ஒரு சில இடங்களில் வன்முறையாக மாறி உள்ளதால் நாட்டில் பல இடங்களில் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது
இந்த நிலையில் குடியுரிமை சட்ட திருத்தம் குறித்த புரிதல் இல்லாமல் மாணவர்கள் போராடி வருவதாகவும், அவர்களுக்கு எளிய முறையில் விளக்க வேண்டியது தன்னுடைய கடமை என்றும் கூறியுள்ள பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா தனது டுவிட்டரில் ஒரு குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து சார்ட் ஒன்றை வரைந்துள்ளார்
அதில் முறையான ஆவணங்கள் இருப்பவர்கள் இந்தியாவில் வசிக்கலாம் என்றும் முறையான ஆவணங்கள் இல்லாதவர்கள் பாகிஸ்தான், ஆப்கன், வங்கதேசத்தை சேர்ந்தவராக இருந்தால் அவர்களுக்கு குடியுரிமை இல்லை என்றும், அதே நேரத்தில் இந்தியாவிற்கு 2014 ஆம் ஆண்டுக்கு முன் மத காரணங்களால் துன்புறுத்தபட்டவர்களாக இருந்தால் மேற்கண்ட மூன்று நாடுகளில் உள்ளவர்கள் இந்தியாவில் வசிக்கலாம் என்றும், 2014ஆம் ஆண்டிற்கு பின் மத காரணங்களால் துன்புறுத்த படாமல் இருந்தால் அவர்களுக்கு குடியுரிமை கிடையாது என்றும் அவர் சார்ட் மூலம் விளக்கியுள்ளார்
பொதுவாக எச்.ராஜா ஒரு டுவீட்டை பதிவு செய்தால் அந்த டுவீட்டுக்கு ஏகப்பட்ட கண்டனங்கள் மற்றும் மீம்ஸ்கள் பதிவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த ட்வீட்டுக்கு ஓரளவு ஆதரவு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
VijayTv: விஜய்…
விஜய் 69…
சினிமாவிலும் சரி…
Sivakarthikeyan: இசை…
ஜெயம் ரவி…