இந்தியா முழுவதும் கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு மருத்துவர்களும், செவிலியர்களும் இரவு பகல் பாராமல் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் மாஸ்க் உள்ளிட்ட உரிய பாதுகாப்புக் கருவிகள் கொடுக்கப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ‘போருக்கு ஆயுதம் இன்றி வீரர்களை அனுப்புவது நியாயமா? முறையான பாதுகாப்பு உபகரணங்கள் கேட்கும் மருத்துவ ஊழியர்களின் குரலுக்கு செவி மடுக்க வேண்டும். அரசின் உடனடி கவனம் தேவைப்படும் அந்த கோரிக்கை, போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்பட வேண்டும்.’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
விஜய் சேதுபதி…
தமிழில் நல்ல…
Surya: சூர்யா…
விடாமுயற்சி படத்தின்…
Gossip: தமிழ்…