நடிகை விஜயலட்சுமி பற்றி கேள்வி எழுப்பியபோது அதற்கு பதிலளிக்க சீமான் மறுத்துள்ளார்.
கடந்த சில நாட்களாக பிரபல நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக சமூக வலைதளங்களி பேசி வருகிறார். மேலும் சீமானுக்கு ஆதரவாக தன்னை மிரட்டுபவர்களை மவுத் பீஸ் என விமர்சித்துள்ளார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த காளியம்மாளுக்கும் விஜயலட்சுமிக்கும் இடையே வீடியோவில் போர் உச்சகட்டத்தை தொட்டது.
ஆனால் இதுவரை விஜயலட்சுமி பற்றி எந்த விளக்கமும் அளிக்காமல் இருந்த சீமானிடம் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் விஜயலட்சுமி பற்றி கேள்வி எழுப்ப முயன்றபோது ‘இதுவரை கேள்விகள் கேட்டீர்கள்.. பதில் சொன்னேன். இதுபோன்ற கேவலங்களுக்கு பதில் சொல்ல முடியாது’ எனக் கோபமாக பதில் சொல்லியுள்ளார்.
சீமானின் இந்த கருத்துக்கு விஜயலெட்சுமியிடம் இருந்து விரைவில் வீடியோ வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து திரைப்பிரபலங்கள்…
ஜன நாயகனை…
கடந்த 15…
பொங்கல் ரிலீஸாக…
நடிகர் ரஜினிகாந்த்…