பல கோடி மோசடி.... ஷில்பா மீது வழக்கு பதிவு... என்னடா இது யோகா டீச்சருக்கு வந்த சோதனை?
பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது அம்மா சுனந்தா மீது லக்னோ காவல் நிலையங்களில் புதிதாக மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கணவர் ராஜ் குந்த்ரா பெண்களை ஏமாற்றி ஆபாசப் படங்கள் எடுத்ததாகவும், ஹாட்ஷாட்ஸ் என்ற செயலியில் அதனைப் பதிவேற்றம் செய்ததாகவும் எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது அம்மா சுனந்தா ஷெட்டி மீது புதிதாக மோசடி வழக்கு ஒன்று பாய்ந்துள்ளது பாலிவுட்டில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
யோகாவில் ஆர்வமுள்ள நடிகை ஷில்பா ஷெட்டி ஒரு காலத்தில் 'லோசிஸ் வெல்னஸ் சென்டர்' என்ற பெயரில் நாடு முழுவதும் பிட்னஸ் சென்டர்களை திறந்தார். இதற்காக ஒவ்வொரு பகுதியிலும் இந்த சென்டர்களை திறக்க பலரிடம் கோடிக் கணக்கில் ஷில்பா ஷெட்டி பணம் வாங்கியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக லக்னோவில் உள்ள ஹஸ்ரத்கனி மற்றும் விபூதி கான்ஸ் காவல் நிலையங்களில் ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது அம்மா சுனந்தா ஷெட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஷில்பா ஷெட்டி ஆரம்பித்த இந்த கம்பெனியில் அவர் தலைவராகவும், அவரது தாயார் இயக்குநராகவும் இருந்தனர். எனவே இவர்கள் இரண்டு பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஆபாச பட விவகாரத்தில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவை மும்பை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்நிலையில், தற்போது நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது அம்மா சுனந்தா ஷெட்டி மீதும் மோசடி புகார் பதிவு செய்யப்பட்டிருப்பது பாலிவுட் சினிமாவில் மிகப்பெரிய பரபரப்பை கிளப்பியுள்ளது.