Home News Reviews Throwback Television Gallery Gossips

தலித் இளைஞர் மீது சிறுநீர் கழித்த சாதிவெறியர்கள் – ஒடிசாவில் நடந்த கொடூரம் !

Published on: December 24, 2019
---Advertisement---

4b45ad68d3136d907f383c8fa4561ace

ஒடிசாவில் தங்கள் சாதி பெண்ணை காதலித்த தலித் ஜாதி இளைஞரின் மீது இரு இளைஞர்கள் சிறுநீர் கழித்த சம்பவம் நடந்துள்ளது.

ஒடிசா மாநிலத்தில் உள்ள பங்கிலா எனும் கிராமத்தை சேர்ந்தவர் சௌமியா ரஞ்சன் தாஸ். இவர் தலித் பிரிவைச் சேர்ந்த இவர் அதே பகுதியில் வசிக்கும் வேறு ஜாதிப் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.  அவரை பார்ப்பதற்கு பார்ப்பதற்காக தனது சென்றுள்ளனர். அப்போது அவரைப் பார்த்து ஆதிக்க ஜாதி இளைஞர்கள் இருவர் அவரை அடித்து மரத்தில் கட்டிவைத்து துன்புறுத்தியுள்ளனர்.

இதனால் மயக்கமுற்ற அவர் நாவறட்சியால் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளார். அவருக்கு தண்ணீர் கொடுக்க மறுத்த அந்த இளைஞர்கள் சிறுநீரை அந்த இளைஞனின் முகத்தில் கழித்துள்ளனர். இதனை அவர்களை சுற்றி நின்ற மற்ற ஆதிக்க சாதிவெறியர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்ப பொதுமக்களின் கவனத்திற்கு வந்துள்ளது.

இந்த விஷயம் சமூக விடயங்களில் கண்டனங்களை பெற வழக்கு பதிவு செய்த போலீசார், இளைஞரின் மீது சிறுநீர் கழித்து அவர்களை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Comment