சமீபகாலமாக சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து கலக்கி வரும் இந்திய அணி ஒரு விஷயத்தில் மட்டும் தொடர்ந்து சொதப்பி வருகிறது.
இந்தியன் 2019 ஆம் ஆண்டிற்கான தனது சர்வதேச தொடர்களை முடித்துள்ளது. உலக கோப்பை போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக தோல்வியடைந்தது தவிர தாங்கள் சிறப்பாக விளையாடி உள்ளதாக இந்திய அணியின் கேப்டன் கோலி பெருமிதம் அடைந்துள்ளார். புள்ளிவிவரங்களும் அவர் சொல்வதை உண்மை என்று தான் காட்டுகின்றன.
ஆனால் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் இந்திய அணி தொடர்ந்து சொதப்பி வருகிறது. பேட்டிங், பவுலிங் என அனைத்து விஷயங்களிலும் இனி சிறப்பாக செயல்பட்டாலும் ஃபீல்டிங்கில் மட்டும் தொடர்ந்து சொதப்பி வருகிறது. இதற்கு உதாரணமாக கடந்த 6 சர்வதேச போட்டிகளில் மட்டும் 21 கேட்ச்களை மிஸ் செய்துள்ளது.
இதுதான் இப்போது இந்திய அணிக்கு மிகப்பெரிய தலைவலியாக உருவாகியுள்ளது இந்திய அணியின் பவுலர்கள் எப்போதுமே சிறந்த ஃபீல்டர்களாக இருந்தது கிடையாது. அதேபோல தோனிக்கு மாற்றாக இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ள ரிஷப் பண்ட் அதிகளவில் கேட்ச் மற்றும் ஸ்டம்பிங்குகளை கோட்டைவிட்டு வருகிறார். இதுவும் இந்திய அணிக்கு மிகப்பெரிய தலைவலியாக இருந்து வருகிறது. அதனால் 2020 ஆம் ஆண்டில் இந்திய அணி அதிக கவனம் செலுத்த வேண்டிய ஒரு துறையாக பில்டிங் இருக்கிறது.
எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக…
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…