சடலமாகக் கிடந்த கள்ளக்காதல் ஜோடி – காவிரி ஆற்றில் குளித்தவர்கள் அலறியடித்து ஓட்டம்..

திருச்சி காவிரி ஆற்றங்கரையில் ஒரு ஆணும் பெண்ணும் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

திருச்சி புத்தூர் பி‌‌ஷப் குளத்தெருவை சேர்ந்தவர் ரமே‌‌ஷ் என்ற கார் ஓட்டுனர். இவருக்கு திருமணம் ஆகி 7 மாதக் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் இவருக்கு திருச்சி தென்னூர் சங்கீதபுரத்தை சேர்ந்த அந்தோணி என்பவரது மகள் ரீனா என்பவரோடு கள்ளக்காதல் உருவாகியுள்ளது. ரீனா கல்லூரிக்கு செல்வதற்காக ரமேஷின் காரில் சென்றபோது இருவருக்கும் பழக்கமாகியுள்ளது.

இந்நிலையில் ரீனாவைக் காரில் வைத்து காரில் ஏற்றிக் கொண்டு, திருச்சி முத்தரசநல்லூர் அருகே உள்ள பழுர் காவிரி கரைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சென்ற அவர்கள் இருவரும் விஷம் குடித்துள்ளனர். இதையடுத்து இருவரும் வாயில் நுரைதள்ளி இறந்துள்ளனர். இதை ஆற்றில் குளிக்க சென்றவர்கள் பார்த்து அலறியடித்து ஓடியுள்ளனர். அதன் பின்னர் போலிஸாருக்குத் தகவல் சொல்ல அவர்கள் சடலங்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இதுவரை தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.

Published by
adminram