லாஸ்லியாவின் முதல் படத்தில் இணைந்த பிரபல காமெடி நடிகர்!

eb44cf9006e2789359c544019b868453

ஆரி நடிக்கும் ஒரு படத்தில் நாயகியாகவும், ஹர்பஜன்சிங் தமிழில் ஹீரோவாக அறிமுகமாகும் ’பிரண்ட்ஷிப்’ என்ற படத்திலும் நாயகியாகவும் லாஸ்லியா நடிக்க இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இந்த இரண்டு படங்களும் வெற்றி பெற்றால் லாஸ்லியா முன்னணி நாயகியாக கோலிவுட்டில் வலம் வருவார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ஹர்பஜன்சிங், லாஸ்லியா நடிக்கும் ’பிரண்ட்ஷிப்’ படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்கள் சமீபத்தில் இணைந்தார் என்ற செய்தி கோலிவுட் திரையுலகை ஆச்சரியப்படுத்தியதோடு, இந்த படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்நிலையில் இந்த படத்தில் காமெடி நடிகர் சதீஷ் தற்போத் இணைந்துள்ளதாகவும் அவர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் இணையும் நடிகர்களின் அறிவிப்புகள் அவ்வப்போது வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஜான் பால் மற்றும் ஷாம் சூர்யா இயக்கத்தில் ஸ்டாலின் என்பவர் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.

Categories Uncategorized

Leave a Comment