">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
தேசிய விருதைப் புறக்கணித்த திரைக்குழுவினர் – சினிமாவிலும் குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு !
தேசிய விருது பெற்ற சுடானி ப்ரம் நைஜீரியா படக்குழுவினர் அந்த விருதினைப் புறக்கணித்துள்ளனர்.
தேசிய விருது பெற்ற சுடானி ப்ரம் நைஜீரியா படக்குழுவினர் அந்த விருதினைப் புறக்கணித்துள்ளனர்.
கடந்த ஆண்டு அறிமுக இயக்குனர் ஸக்காரியா முகமது இயக்கத்தில் திரைப்படம் சுடானி ப்ரம் நைஜீர்யா எனும் திரைப்படம். அனைத்துத் தரப்பு மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் கேரள அரசின் விருதுகளில் ஐந்தைத் தட்டிச்சென்றது.
இதையடுத்து 66-ஆவது இந்திய தேசிய விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த பிராந்திய மொழி திரைப்படத்திற்கான விருதிற்காக இந்தத் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது. மேலும் சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விருதையும் தட்டிச் சென்றது. ஆனால் அந்த விருதைப் பெற மறுத்துள்ளனர் படக்குழுவினர். குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்க்கும் விதமாகவும் அதற்கெதிராக போராடும் மக்களுக்கு ஆதரவு தரும் விதமாகவும் இந்த விருதினைப் படக்குழு ஏற்கம்றுத்துள்ளது.