தீபிகாவின் விளம்பரத்தை திடீரென நிறுத்திய மத்திய அரசு: பழிவாங்கலா?

ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர்களை சமீபத்தில் மர்ம நபர்கள் சிலர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதை கண்டித்து நடைபெற்ற போராட்டத்திற்கு பெரும் ஆதரவு கிடைத்த நிலையில் நடிகை தீபிகா படுகோனை இந்த போராட்டத்திற்கு தனது ஆதரவு நேரில் தெரிவித்தார்.

தீபிகாவின் இந்த திடீர் செயலால் மத்திய அரசு அதிர்ச்சி அடைந்தது. இதனை அடுத்து தீபிகா படுகோனே தாவூத் இப்ராஹிமுடன் தொடர்பில் இருப்பதாகவும் பாஜக எம்பி ஒருவர் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த நிலையில் தீபிகா படுகோனே நடிப்பில் உருவான ’ஸ்கில் இந்தியா’ என்ற விளம்பர படத்தை திடீர் என மத்திய அரசு நிறுத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த விளம்பர படம் திறன் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் படமாக்கப்பட்டு ஒளிபரப்புக்கு தயார் நிலையில் இருந்தது. அனைவருக்கும் சம வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்ட இந்த விளம்பரத்தை மத்திய அரசு திடீரென கைவிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

இது குறித்து விளக்கமளித்த மூத்த அதிகாரி ஒருவர் இந்த விளம்பரம் முறையாக எடுக்கப்படவில்லை என்பதால் கைவிடப்பட்டதாக தெரிவித்தார். இருப்பினும் ஜே.என்.யூ மாணவர் போராட்டதிற்கு தீபிகா படுகோனே நேரில் சென்று ஆதரவு தெரிவித்ததால் இந்த விளம்பரம் நிறுத்தப்பட்டதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்

Published by
adminram