பள்ளி மாணவர்களைக் கடத்திச் சென்ற சீமானின் தம்பி – எதற்குத் தெரியுமா ?

கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி சிறுவர்கள் 5 பேரை நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் ஒருவர் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தாழாக்குடி அரசு தொடக்கப் பள்ளி மாணவர்கள் 6 பேரை, மர்ம நபர் ஒருவர் காரில் கடத்திச்செல்வதாக அப்பள்ளியின் தலைமை ஆசிரியை புகார் கொடுத்தார். இதையடுத்து மாணவர்களை தேடிய போலீஸார் போலீசார் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நாம் தமிழர் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் அந்த குழந்தைகளை மீட்டனர்.

பள்ளி மாணவர்களை ஆசிரியர்களுடன் அனுப்பி வைத்த போலிஸார் அவர்களை அங்கு அழைத்து வந்தது யார் என்ற விசாரணையில் இறங்கினர். இது சம்மந்தமாக ராகுல் என்பவர்தான் குழந்தைகளை அழைத்து வந்து அவர்களை மாணவர் பாசறையில் சேர்க்க முயன்றதாக சொல்லப்பட்டது. கடத்தப்பட்ட குழந்தைகளில் இருவர் ராகுலுக்கு சொந்தக் காரர்கள் என சொல்லப்படுகிறது. இதனால் குழந்தைகளின் பெற்றோர்கள் யாரும் ராகுல் மேல் புகார் அளிக்கவில்லை.

ஆனால் பள்ளி தலைமையாசிரியர் புகார் அளித்தால் கூட அவரை கைது செய்ய விசாரிக்க தயாராக இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Published by
adminram