
தர்பார் திரைப்படத்திற்கு பின் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் ஒரு புதிய படத்தில் ரஜினி நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இப்படத்தில் அவருடன் மீனா, குஷ்பு,கீர்த்தி சுரேஷ், சதீஷ், சூரி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முடிவடைந்துள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் விரைவில் துவங்கவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் என ஒரு போஸ்டர் வெளியாகியுள்ளது. மன்னவன் என தலைப்பு வைக்கப்பட்ட இந்த போஸ்டரில் ரஜினி பட்டு வேஷ்டி கட்டி காட்சி அளிக்கிறார். இதைக்கண்ட ரசிகர்கள் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் லீக் ஆகிவிட்டதா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதை ரசிகர் ஒருவர் உருவாக்கி இருக்கலாம் எனவும், ஆனால், அச்சு அசல் அதிகாரப்பூர்வமான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் போலவே இருப்பதாக கூறி ரஜினி ரசிகர்கள் பலரும் இதை தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். சிலர் படத்தின் தலைப்பு ‘மன்னவன்’ இல்லை. ‘அண்ணாத்த’ என்றும் கூறி வருகின்றனர்.
Ithu official poster ah??? #Thalaivar168 pic.twitter.com/iTGzLLhPHM
— காத்திருந்து_பாருங்கள்ᴰᴬᴿᴮᴬᴿ (@rajinimsd11) January 22, 2020