வில்லி நடிகைக்கு ஹீரோயின் புரமோஷன்… விரைவில் திரையில்….

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடம் அறிமுகமானவர் சைத்ரா ரெட்டி. அதன்பின் ஜீ தமிழில் வெளியான ‘யாரடி நீ மோகினி’ சீரியலில் வில்லியாக நடித்திருந்தார். சமீபத்தில் அவருக்கு திருமணமும் நடந்தது.

இந்நிலையில், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள ஒரு புதிய சீரியலில் சைத்ரா கதாநாயகியாக புரமோஷன் ஆகவுள்ளார். ராஜா ராணி சீரியல் புகழ் சஞ்சீவ் இந்த தொடரில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இந்த சீரியலுக்கு ‘கயல்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.  இந்த சீரியலில் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களும் வெளியாகி வைரலாகி வருகிறது.,

Published by
adminram