More

அந்த படத்தை சீண்ட கூட ஆள் இல்லையாம்….விஷால் நிலைமை இப்படி ஆகிப்போச்சே….

ஒரு திரைப்படம் தயாரிப்பில் இருக்கும் போதே ஓடிடியில் என்ன விலை என பேசிவிடுவார்கள். பெரிய நடிகர்கள், பெரிய பட்ஜெட் படம் என்றால் ஒரு விலை, சிறிய நடிகர்கள் என்றால் ஒரு விலை என டிடி மற்றும் ஓடிடி நிறுவனங்கள் விலை பேசி வருகின்றனர். 

Advertising
Advertising

அதுவும் படம் வெளியாவதற்கு முன்பே சாட்டிலைட் உரிமை மற்றும் ஓடிடி நிறுவனங்களிடம் டீல் பேசி விட விற்பனை செய்துவிட வேண்டும். படம் வெளியாகி ரிசல்ட் சரியில்லை எனில், அப்படம் அடி மாட்டு விலைக்குதான் போகும். மேலும், சில படங்கள் யாராலும் சீண்டப்படாமலும் போகும்.  இதை விஷாலின் சக்ரா திரைப்படம் சந்தித்துள்ளது.

இப்படம் வெளியாவதற்கு முன் சில தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் ஓடிடி நிறுவனங்கள் தயாரிப்பு நிறுவனத்தை அணுகியது. ஆனால், அதிக விலைக்கு டீல் பேச அவைகள் ஒதுங்கிவிட்டன. படம் வெளியாகட்டும் நம்மை தேடி வருவார்கள் என தயாரிப்பு நிறுவனம் காத்திருக்க, ரிலீஸுக்கு பின் ரிசல்ட் தெரிவிந்துவிட்டது. எனவே, இப்படத்தை ஓடிடியில் வெளியிடவோ, சாட்டிலைட் உரிமையை வாங்கவோ எந்த நிறுவனமும் முன்வரவில்லையாம்.

இது அப்படத்தின் தயாரிப்பாளர் விஷாலுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்…..

காற்றுள்ளபோதே தூற்றுக்கொள் என சும்மாவா சொன்னார்கள்!.

Published by
adminram

Recent Posts